கல்பாக்கம் அருகே மதுபோதையில் ஆம்லெட்க்காக மைத்துனரை கொலை செய்த மாமன்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

man killed by relative for egg in kalpakkam

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 30).  என்பவரும் அவரது உறவினரான (மாமன்) புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த முருகன் (32) ஆகிய இருவரும் புதுப்பட்டினம் ஈசிஆர் சாலையில் உள்ள மாருதி சுசுகி கார் ஷோரூம் அருகே தாங்கள் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது, 

இந்நிலையில் குடி போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் செல்லப்பனை கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். மது போதையில் இருவர் சண்டையிட்டுக் கொள்வதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மோதல் காரணமாக ஒருவர் கீழே சுருண்டு விழுந்ததைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உலகபுகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கல்பாக்கம் காவல் துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து செல்லப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக உடலை கைப்பற்றிய கல்பாக்கம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது - அதிமுகவினருக்கு வானதி அறிவுறை

ஆம்லெட்க்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios