Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலிக்காக கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ஊசி போட்ட கணவன்

ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த கர்ப்பிணி மனைவிக்கு மறைமுகமாக எச்.ஐ.வி. ஊசியை செலுத்திய கணவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Man Injects Wife With HIV Slow Poison in Divorce Case Row in Guntur
Author
First Published Dec 17, 2022, 8:55 PM IST

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்வர்கள் சரண், மாதவி இருவரும் கடந்த 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரணுக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் சரண் அப்பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு தனது மனைவி ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை அறிந்த சரண், தனது கர்ப்பமாக இருந்த மனைவியிடம் நமக்கு பெண் குழந்தை தான் உள்ளது, ஆனால் எனது சகோதரர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் கணிப்பு

நமது இறுதிக் கட்டத்தில் இறுதிச் சடங்குகள் செய்ய ஆண் குழந்தை வேண்டும். அதனால் எனக்கு தெரிந்த மருத்துவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன். அவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டால் நமக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறி மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். பின்னாளில் மாதவியின் உடல்நலன் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது கணவர் தன்னிடம் பொய் சொல்லி எச்.ஐ.வி ஊசியை போட்டுவிட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது பெண் வீட்டார் 20 லட்சம் ரொக்கம், நிலத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.

பிரதமரை அவமதித்த பாக். அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? திமுகவுக்கு வானதி கேள்வி

அதன் பின்னர் கடந்த 2019ம் ஆண்டு கூடுதலாக பணம் வேண்டும் என்று பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்களால் கொடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சரணுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே மனைவி மாதவிக்கு எச்.ஐ.வி. ஊசியை போட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios