குமரி மாவட்டம் இரணியல் அருகே புதுவிளையை சேர்ந்த சசிகுமார் கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில் சசிகுமாரின் நடத்தையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது.

இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த கணவனை இழந்த சாந்தா என்பவருடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாந்தாவின் கணவர் இறந்ததால் துணையின்றி தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் வறுமையில் இருந்த சாந்தாவும்,  அவரது மகளும் அடுத்த வேலை உணவுக்கே வழியின்றி வாழ்ந்து வந்துள்ளனர். மகள் இரணியலில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் சந்தாவுக்கு சசிகுமார் பணம் உதவி செய்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டு அடிக்கடி வரும் சசிகுமார், சாந்தாவிடம் பணத்தை கொடுத்து வந்ததார். இந்தநிலையில், சசிகுமாரின் காமவெறி புத்தி சாந்தாவின் மகள் மீது திரும்பியது. இந்நிலையில் அடிக்கடி பள்ளியிலும் வீட்டிலும் சோர்வாக இருந்து வந்த தனது மகளை சாந்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது சாந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே மருத்துவர்கள் இரணியல் போலிசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரித்ததில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் கள்ளக்காதலன் சசிகுமார் என தெரியவந்தது. கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டு அடிக்கடி வீட்டிற்கு வரும் சசிகுமார் சாந்தாவிடம் பணத்தை கொடுத்து பொருட்கள் வாங்க வெளியில் அனுப்பி விட்டு மது போதையில், தனியாக இருக்கும் அவருடைய மகளை   மிரட்டியே உல்லாசம் அனுபவித்ததை அன்ஹா பெண் அழுதுகொண்டே கூறியுள்ளார்.  இதையடுத்து குழித்துறை மகளீர் போலீசார் காமக்கொடூரன் சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.