போலீஸ் அறைந்ததில் பலியான நபர்: மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மகாராஷ்டிர மாநிலத்தில் போலீஸ் ஒருவர் அடித்தத்தில் சாமானியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காரின் ஹெட்லைட்டைப் பற்றிய வாக்குவாதத்தின் போது, மாநில ரிசர்வ் போலீஸ் படை (எஸ்ஆர்பிஎஃப்) வீரர் நிகில் குப்தா என்பவர் அடித்ததில் மற்றொரு நபரான முரளிதர் ராம்ராஜி நெவாரே உயிரிழந்துள்ளார்.
நாக்பூரின் மாதா கோயில் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா (30) தனது சகோதரி வசிப்பதால் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் தனது காரை நிறுத்தியபோது, வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் அதே பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முரளிதர் ராம்ராஜி நெவாரே (54) என்பவரின் முகத்தில் பட்டுள்ளது.
சிலிக்கா ஜெல் கலந்த ஜூஸ்: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!
இதனை சரி செய்யுமாறு, நிகில் குப்தாவிடம், முரளிதர் ராம்ராஜி பணிவாக கூறியுள்ளார். ஆனால், கோபடைந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் நிகில் குப்தா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், முரளிதர் ராம்ராஜியை நிகில் குப்தா பலமாக அறைந்துள்ளார். இதனால், நிலைகுழைந்து கீழே விழுந்த அவர், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிகில் குப்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.