திருப்பூரைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு நடனத்தில் ஆர்வம் இருந்ததால் அந்த பகுதியில் இருக்கும் ஒரு நடன பள்ளியில் பயிற்சிக்காக பெற்றோர் சேர்த்து விட்டனர். ஞாயிற்று கிழமைகள் தோறும் நடன ஆசிரியை ஒருவர் சிறுமிக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல சிறுமி பயிற்சிக்காக சென்றார். அன்று குடியரசு தினம் என்பதால் ஆசிரியை வெளியில் சென்றுள்ளார். வீட்டில் அவரது தந்தை சரவணன்(50) தனியாக இருந்தார். சிறுமியை வீட்டிற்குள் அழைத்த சரவணன் பேச்சு கொடுத்துள்ளார். பின் திடீரென சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறி நடந்துள்ளார். அதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்த அவர் அலறி அடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். 

பின் தனது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் சிறுமி நடந்தவற்றை கூறியிருக்கிறார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் சரவணனை பிடித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்த காவலர்கள் போக்சோவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!