திருவண்ணாமலை அருகே இருக்கும் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் விநாயக மூர்த்தி(21). இவர்கள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு செல்லும்போது விநாயகமூர்த்தி சிறுமியிடன் பேச்சு கொடுத்துள்ளார்.

சிறுமியிடம் நெருங்கி பழகிய விநாயகமூர்த்தி ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்திருக்கிறார். வெளியே யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டிய அவர் மேலும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். இந்தநிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. அதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

செய்வதறியாது திகைத்த அவர்கள் சிறுமியிடம் அதுகுறித்து கேட்டனர். அப்போது விநாயக மூர்த்தி தன்னை மிரட்டி பலாத்காரம் செய்த தகவலை சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விநாயகமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: 'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!