அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய 9 வயது சிறுமியை ஒரு வருடமாக சீரழித்து வந்த காமக்கொடூரன்..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கலை சேர்ந்தவர் உத்திரகுமார்(35). பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கலை சேர்ந்தவர் உத்திரகுமார்(35). பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியே கடந்த ஒராண்டு மேலாக இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார். நாளுக்கு நாள் உத்திரகுமாரின் தொல்லை தாங்க முடியாததால் பொறுமை இழந்த தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் உத்திரகுமாரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 9 வயது சிறுமியை மிரட்டி கடந்த ஒராண்டு மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.