சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 20 வயது இளம்பெண்ணான இவர் தஞ்சையில் இருக்கும் ஒரு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கல்லூரிக்கு கிளம்பியுள்ளார். மலைக்கோட்டை விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இவரது அருகே சிவகுமார்(40) என்பவர் பயணம் செய்துள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்த இவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு செல்வதற்காக மலைக்கோட்டை ரயிலில் பயணம் செய்திருக்கிறார். இந்தநிலையில் நள்ளிரவில் ரயிலில் வைத்து மாணவிக்கு சிவகுமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவரை கண்டிக்கவே, சிவகுமார் ராஜியை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதையடுத்து அதிகாலை 4 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீசாரிடம் மாணவி புகாரளித்தார்.

புகாரின் படி பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சிவகுமார் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஓடும் ரயிலில் மாணவிக்கு என்ஜினீயர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read:  கோர தாண்டவமாடிய கடன்தொல்லை..! மிட்டாய் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை..!