Asianet News TamilAsianet News Tamil

சரக்கு தட்டுப்பாடு... சக்கை போடு போடும் கேரட் பீர் விற்பனை... வீட்டில் காய்ச்சி விற்றவர் கைது..!

மதுபானங்கள் கிடைக்காததால் மாற்று போதைக்காக வீட்டில் காய்ச்சப்பட்ட கேரட் பீர்  தயாரித்து விற்பனை செய்த வர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

Man arrested for brewing carrot beer
Author
Tamil Nadu, First Published May 1, 2020, 4:33 PM IST

மதுபானங்கள் கிடைக்காததால் மாற்று போதைக்காக வீட்டில் காய்ச்சப்பட்ட கேரட் பீர்  தயாரித்து விற்பனை செய்த வர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். Man arrested for brewing carrot beer

ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், மது ப்ரியர்கள் அல்லாடி வருகின்றனர். சில ஷேவிங் லோசனை கலக்கி குடித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது எப்படி என பார்த்து பரிசோதனை செய்தவர்கள் காவல்துறையினரிடன் சிக்கி வருகின்றனர்.

 Man arrested for brewing carrot beer

இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் சிலர் போதை பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் ஆய்வாளர் தெய்வேந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் நடத்திய தீவிர சோதனையில் சுனாமி குடியிருப்பு இ-பிளாக் பகுதியை சேர்ந்த 34 வயதான மரியதாஸ் அவரது வீட்டில் கேரட் பீர் தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 லிட்டர் கேரட் பீரை பறிமுதல் செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios