Asianet News TamilAsianet News Tamil

“பகுதி நேர வேலை, கை நிறைய சம்பளம்” ஆசை காட்டி மோசடி; பணத்தை திருப்பி கேட்டால் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

man arrested by cyber crime police for money cheating case in thoothukudi vel
Author
First Published Feb 22, 2024, 11:02 AM IST

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மீ இவரது மருமகன் ஜின்னா என்பவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பார்ட் டைம் ஜாப் குறித்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நபரை வாவு யூவியாஸ் பாக்மி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த நபர் வாவு யூவியாஸ்  பாக்மியிடம் ஆசை வார்த்தைகள் கூறி மோசடியாக பேசி தனது பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினால் லாபம் பார்க்கலாம் என கூறியுள்ளார்.

தொலைநோக்குடன் பட்ஜெட் போடுவது பாஜக; கமிஷனுக்காக பட்ஜெட் போடுவது திமுக - அண்ணாமலை

இதைத்தொடர்ந்து வாவுயூவியாஸ் பாக்மீ தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 11 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்பு தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து மோசடி நபரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு மோசடி நபர் பணத்தை திருப்பி தராமல் வாவு யூவியாஸ் பாக்மீ மற்றும் ஜின்னா ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிரட்டி உள்ளார்.

காத்திருந்தது எல்லாம் வீண்... இனி அதிமுகவுடன் கூட்டணி இல்லை- முடிவுக்கு வந்தது பாஜகவின் ரகசிய பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து வாவு யூவியாஸ் பாக்மீ தேசிய சைபர் கிரைம் குற்ற  தடுப்பு போர்ட்டலில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இந்த மோசடியில் ஈடுபட்டது மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்த ஸ்ரீதரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios