கடைக்கு சென்று சரக்கு வாங்கிட்டு வர நேரமானதால் மனைவியை கணவன் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மகாராஷ்டிராவில் மாநிலம் மும்ரா மாவட்டத்துக்குட்பட்ட அம்ரூட் நகரை சேர்ந்தவர் பிரவீன் புர்வியா (30). இவரது மனைவி சந்தோஷி (25). நேற்று முன்தினம் பிற்பகல் பிரவீன் போதையில் தள்ளாடி கொண்டே வீட்டுக்கு வந்தார். பின்னர் போதை இறங்கியது. மேலும், போதை ஏற்றுவதற்காக தனது மனைவியை மதுபான கடைக்கு சென்று மது வாங்கி வரும்படி கூறினார். ஆனால், கடைக்கு சென்று வாங்கி வர மனைவி மறுத்தார். 

தொடர்ந்து கணவர் வற்புறுத்தியதால் சந்தோஷி மது கடைக்கு சென்றார். மதுவை வாங்கி கொண்டு அவர் வீட்டிற்கு வருவதற்கு தாமதம் சற்று தாமதமானது. இதனால், பிரவீன் கடும் ஆத்திரமடைந்தார். மனைவி வீட்டுக்குள் நுழைந்ததும், அவரை அங்கு கிடந்த மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவி சந்தோஷி ரத்து வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து, கொலை தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.