மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பட்டப்பகலில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் இஸ்மாயில் இவர் புதுமண்டபத்தில் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரிஷ்வானா பானு (22) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில், வீட்டின் மாடியில் உள்ள அவரது அறையில் தனியாக வசித்து வருகிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் மகள் ரிஷ்வானா பானு வெளியே வாரததால் அவரது தாய் அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது, கழுத்து அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு தாய் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார்.

இதுதொடர்பாக உடனே தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.