நீ தானே என்ன ஜெயிலுக்கு அனுப்பின!உன்ன தான் தேடிட்டு இருந்தேன்! SI மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி
மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எஸ்.ஐ. அழகுமுத்து மற்றும் காவலர்கள் இரவு மாடக்குளம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கினர். அந்த காரில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி (எ) மணிகண்டன் (30) இறங்கினார்.
வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயன்றும், பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியும் ரவுடி கொல்ல முயற்சித்த சம்பவம் மதுரையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எஸ்.ஐ. அழகுமுத்து மற்றும் காவலர்கள் இரவு மாடக்குளம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கினர். அந்த காரில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி (எ) மணிகண்டன் (30) இறங்கினார்.
இதையும் படிங்க;- ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் கண்ட இடத்தில் கை வைத்து இளைஞர் பாலியல் சீண்டல்..!
அப்போது, அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தன் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினாய் என்று எஸ்.ஐ.அழகுமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், இவ்வளவு நாளாக உன்னை தான் தேடினேன் என கூறி திடீரென காரில் இருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐயை வெட்ட முயன்றார். இதில், நல்வாய்ப்பாக எஸ்.ஐ. விலகினார்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. கணவரை போட்டு தள்ளிவிட்டு சேப்டியாக செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர மனைவி..!
இதையடுத்து ரவுடி மணிகண்டனை சக போலீசார் பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ரவுடி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். ஒரு குண்டு புதருக்குள் விழுந்து வெடித்தது. மற்றொரு குண்டு வெடிக்கவில்லை. இதனையடுத்து, காரை அங்கேயே நிறுத்தி விட்டு ரவுடி தப்பிக்க காட்டுப்பகுதிக்கு சென்றார். ஆனால், அவரை விடாமல் விரட்டி சென்று பிரபல ரவுடி கூல்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி ஒருவர் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.