மதுரை பைக் திருட்டில் ஈடுபட்ட போதகர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 டூவீலர்கள்  பறிமுதல் செய்திருக்கிறது மதுரை போலீஸ். இந்த சம்பவம் மதுரை மற்றும் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தேனியைச் சேர்ந்தவர் விஜயன்(எ) சாமுவேல் மதுரை தனக்குளம் அருகிலுள்ள பர்மா காலனி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கிறிஸ்துவ சபை ஒன்றை நடத்தினார். இரு சக்கர வாகனங்களை திருடி விற்க திட்டமிட்டார். வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப் பட்டிருந்த ஸ்கூட்டி உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை திருடி னார். சில தினத்துக்கு முன், திருடிய பைக் ஒன்றை மதுரை சுப்ரமணியபுரம் பகுதியிலுள்ள ஒர்க்ஷாப் மெக்கானிக் ஒருவர் மூலம் விற்க முயன்றார். பைக் குறித்த விவரங்களை கேட்ட போது, சரியான விவரம் தெரிவிக்க முடியாமல் திணறினார். சந்தேகமடைந்த மெக்கானிக் சுப்ரமணியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் சாமு வேலுவை பிடித்தனர். 


விசாரணையில், அவர் கரோனா ஊரடங்கையொட்டி ஏராளமான இரு சக்கர வாகனங்களை திருடியது தெரிந்தது. இவற்றில் 3 வாகனங்களை தேனியிலுள்ள அவரது தந்தையிடம், ஒரு வாகனத்தை அவரது நண்பருக்கு இலவசமாக கொத்திருப்பதும் தெரிந்தது. பிற வாகனங்களை அடகு வைத்து பணம் வாங்கியது மேலும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் விஜயன் மற்றும் அவருக்கு உதவிய திருநகரைச் சேர்ந்த செல்வம் என்ப வரை கைது செய்தனர். அவர்களிடம் 12  வாகனங்களை பறிமுத ல் செய்தனர். கரோனா ஊரடங்கை பயன்படுத்தி கிறிஸ்துவ போதகரே பைக் திருட்டு வழக்கில் சிக்கியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.