மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரம் முட்புதர் சூழ்ந்த பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு சிறுமியும் பிணமாக கிடந்தனர்.  இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டவர் கோவையைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் என்பதும், அந்த சிறுமி அவரது மகள் ஸ்வீட்டி என்பதும் தெரியவந்தது.

அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் நடத்தி விசாணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன்நகரை சேர்ந்தவர் கிங்ஸ்டன் கிருபாகரன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.  இவரது மனைவி விஜி மேட்டுப்பாளையம் அரசு மருத்வமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவர்களது மகள் ஸ்வீட்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மகிழ்ச்சிகரமாக போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் விதி ஜெயகுமார் ரூபத்தில் விளையாடியது. விஜி பணியாற்றி வரும் மருத்துமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தார் ஜெயகுமார். அப்போது ஜெயகுமாருக்கும், விஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அந்தப் பழக்கம் கள்ளக்தலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து தெரிய வந்ததும் கிங்ஸ்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஜெயகுமாருடனான கள்ளக் காதலை விடமுடியாத விஜி ஒரு கட்டத்தில் கணவரிடம் இருந்து  விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார். இதையடுத்து கிங்ஙஸடன் தனது மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் அண்மையில்தான் விவாகரத்து கிடைத்துள்ளது. இதனால் அப்பாவும், மகளும் மிகுந்த மனவருத்தத்துடன் வசித்து வந்தனர். கடந்த வாரம் தனது மனைவியை போனில் தொடர்பு கொண்ட கிங்ஸ்டன், நடந்ததெல்லாம் மறந்துவிடலாம், குழந்தைக்காக நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என அழைத்திருக்கிறார். ஆனால் மிகுந்த கோபமடைந்த விஜி இவரை கடுமையாக திட்டியதோடு மட்டுமல்லாமல் அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கிங்ஸ்டன் போனில் அவரை தொடர்பு கொண்ட விஜியின் கள்ளக் காதலன் ஜெயகுமார், இனிமேல் விஜி விஷயத்தில் தலையிட்டால் நடப்பதே வேறு என மிரட்டியிருக்கிறார்.

ஏற்கனவே மிகுந்த மன உளைச்சலில் இருந்த  கிங்ஸ்டனுக்கு இந்த மிரட்டல் வேதனையையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலை செய்ய முடிவு செய்த அவர் தனது மகளிடம் இது குறித்து சொல்லி அழுதிருக்கிறார்.

அப்போது மகள் ஸ்வீட்டி நானும் உங்களுடன் வருகிறேன் என கிளம்பியுள்ளார். அவர்கள் இருவரும் மதுரையில் உள்ள உறவினர் விட்டுக்குச் சென்றுவிட்டு, பின்னர் தோப்பூர் அருகே குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு அவர்கள் எழுதிவைத்த கடிதத்தில் இருவரும் கையயெழுத்திட்டுள்ளனர்.

தான் மிகவும் நேசித்த மனைவி விவாகரத்து வாங்கிதோடு மட்டுமல்லாமல் கள்ளக் காதலனுடன் சென்றுவிட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கிங்ஸ்டன் தனது மகளுடன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.