மதுரையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கு! குடோனில் வேலை செய்யும் ஊழியரே போட்டு தள்ளியது அம்பலம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(34). இவர் மதுரை அண்ணாநகர் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார். மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(34). இவர் மதுரை அண்ணாநகர் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார். மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும், குடோன் வைத்து அரிசி வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் பயங்கரம்.. பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு!
கடந்த வியாழக்கிழமை அன்று காலை 6 மணியளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள அவருடைய குடோனுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தத சக்திவேல் அவர்களிடம் தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சக்திவேலின் அரிசி குடோனில் வேலை செய்த ஊழியர்களே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவரது அரிசி குடோனில் மருதுபாண்டியன் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதால் மருதுபாண்டியனின் குடும்பத்தை சக்திவேல் தரக்குறைவாக பேசியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. விஷயம் தெரிந்த கணவர்.. இறுதியில் நடந்த பகீர் சம்பவம்!
இதனையடுத்து மருதுபாண்டியன், அவரது சகோதரர் ரஞ்சித்குமார் ஆகியோர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.