அப்போது சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தல்லாகுளம் போக்குவரத்துக் காவலர் ஜோதி மற்றும் அவருடைய உறவினர் சத்தியவாணி இருவர் மீது பேருந்து மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்,

அதேபோல் சாலையின் மறுபக்கம் சாலையை கடப்பதற்காக காத்திருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மீது மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார், 

மேலும்,படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தனின் நண்பன் விக்கி மற்றும் சத்தியவாணியின் 15 வயது மகள்  இருவரையும் மீட்டு காவல் துறையினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சத்தியவாணியின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரையில் நள்ளிரவில் சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசுப் பேருந்தால் இருவேறு இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பெண்கள் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்து தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.