சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் படுகொலை வழக்கில் கைதான 9 பேர் உள்ளிட்ட 16 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் படுகொலை வழக்கில் கைதான 9 பேர் உள்ளிட்ட 16 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ளனர்.
சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சென்னை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, நில அபகரிப்பு, சைபர் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 100 குற்றவாளிகள், திருட்டு சங்கிலி பறிப்பு பண மோசடி, வழிப்பறி ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 33 குற்றவாளிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள், பெண்களை வைத்துப் பாலியல் தொழில் செய்த 2 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 1 குற்றவாளி, உணவு பொருள் கடத்தல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 148 குற்றவாளிகள் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிராட்வேயைச் சேர்ந்த முகமது நௌஷத் அலி (35) உள்ளிட்ட 16 பேர் காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் கடந்த இரு தினங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில், அத்தியாவிசியப் பொருட்களை பதுக்குதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
