Asianet News TamilAsianet News Tamil

திருமணமாகாமல் காதலியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த ஆபாச பப்ஜி மதன்... கடன்காரனை கோடீஸ்வரனாக மாறியது எப்படி..?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தான் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது 8மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
 

Madan who lived in the same house with his girlfriend without getting married ... YouTube turned the debtor into a millionaire ..!
Author
Tamil Nadu, First Published Jun 19, 2021, 3:31 PM IST

மதன், கிருத்திகா காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் பல ஆண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தான் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது 8மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

விபிஎன் சர்வரை பயன்படுத்தும் மதன், தனது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் செய்யும் நிலையில், பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள பப்ஜி மதனின் வீட்டை சோதனை செய்து அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதன் தொடங்கிய 3 யூடியூப் சேனலுக்கும் மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது.Madan who lived in the same house with his girlfriend without getting married ... YouTube turned the debtor into a millionaire ..!

மதன் வெளியிட்ட பப்ஜி வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 3 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை மதன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு 30 ஆம்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கடந்த 2017 ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை மதன்குமார் நடத்தியுள்ளார்.

இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவு உணவகத்தில் வருவாய் இல்லை. இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மதன், கடைக்கு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி இருந்த போதே மதன் தலைமறைவாகியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த வாடகை பாக்கி ரூ.2 லட்சம். அந்த கட்டடத்தின் உரிமையாளரான கஜபதி என்பவர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் அது தொடர்பாகப் புகார் அளித்து, அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

Madan who lived in the same house with his girlfriend without getting married ... YouTube turned the debtor into a millionaire ..!

அதன் பிறகு தான், மதன் தீவிரமாக பப்ஜி விளையாட்டில் இறங்கி பணம் பார்க்கத்துவங்கியுள்ளார். தனது உருவத்தை வெளியிட்டால் தன்னை தேடும் கடன்காரர்கள் மற்றும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காகத் தான், தன்னை அடையாளம் தெரியாத நபராகக் கடைசி வரை காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார். மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் நேரம். இவர் ஆன்லைனில் இருக்க இருக்க, பணம் கொட்டி கொண்டே இருக்குமாம்.

 கடைசியில் அது தான் தனது தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதி, அதைத் தனது அடையாளமாகவும் மாற்றிக்கொண்டார் என்கிற விவரமும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதற்கிடையே மதனைக் கைது செய்வதில் மத்திய குற்ற பிரிவு போலீசார் மும்முரமாக இருந்தனர். மதன் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தை வைத்து போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த நிலையில், தன்னை யாராலும் நெருங்கக் கூட முடியாது என்ற திமிரோடு இருந்துள்ளார். 3 சிம் கார்டுகளை மதன் பயன்படுத்தி வந்த நிலையில், போலீசாருக்கு ஒரு ரகசியத் தகவல் வந்தது.அதில் மதன் தர்மபுரியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்ற போலீசார் ரகசியமாக அந்த வீட்டைக் கண்காணித்தனர். அந்த வீடு மதனின் உறவுக்காரர் ஒருவரின் வீடு என்பது தெரிய வந்தது. மேலும் அந்த உறவினரின் எண்ணைக் கண்காணித்த போலீசார் அவர் யாரிடம் எல்லாம் பேசுகிறார் என்பதையும் கண்காணித்து வந்தனர்.Madan who lived in the same house with his girlfriend without getting married ... YouTube turned the debtor into a millionaire ..!

இதையடுத்து மதன் அந்த வீட்டில் தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்த போலீசார், அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து மதனைக் கைது செய்தனர். போலீசார் வந்ததைச் சற்றும் எதிர்பாராத மதன் அதிர்ச்சியில் உறைந்து  போனார். யூடியூப் மூலமாக மதன் சம்பாதித்த பணத்திற்கு, வருமான வரி ஒழுங்காகவே செலுத்தவில்லையாம்.. முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு செய்துள்ளார். அந்த பணத்தை மொத்தமாகவே முதலீடுகளில் போட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஜெயில்? ஆனால், இதுவரை அவர் சம்பாதித்த தொகை எவ்வளவு, அதற்கு செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை. நிறைய லாபம் சம்பாதித்துள்ளதால், அதுகுறித்தெல்லாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், இதன் மூலம் மதன் மீது வரி ஏய்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios