விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். . இவர் விருதுநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். இதே போல் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் ரஞ்சிதா.  இவரும் தனியார் கல்லூரியில்பி.எஸ்சிபடித்து முடித்துள்ளார்.  இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

நேற்று மாலை விருதுநகர்-சாத்தூர் ரெயில்பாதை பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த ரெயில்முன் இருவரும் பாய்ந்துள்ளனர். இதில் 2 பேரும் உடல் சிதைந்து அதே இடத்தில் இறந்து போனார்கள்.

தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.