மும்பை ரேரோடு தாருகானா பகுதியை சேர்ந்தவர் சந்தியா. எம்.ஏ. பட்டதாரி. இவரது காதலன் விஜய் குமார் . 2 பேரும் தமிழர்கள். நேற்றுமுன் தினம் மதியம் 2 பேரும் சாந்தாகுருஸ், கோலிபர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். 

மாலை நீண்டநேரமாகியும் அவர்கள் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர் அறை கதவை தட்டினார். அப்போது உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு சந்தியா பேச்சுமூச்சு இன்றி கிடந்தார். மேலும் அவரது காதலன் மாயமாகி இருந்தார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தியாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் சிவ்ரி பகுதியில் விஜய் குமார் லாரி முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அவர் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். 

அதில் சந்தியாவும், விஜய்குமாரும் காதலித்து வந்து உள்ளனர். திருமணம் செய்வதாகவும் இருந்தனர். இந்தநிலையில் விஜய்குமாருக்கு சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

ஏனென்றால் சந்தியாவுக்கு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது விஜயகுமாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சந்தியாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி அவர் சம்பவத்தன்று சந்தியாவை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று  உல்லசம் அனுபவித்துள்ளார். கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

பின்னர் அங்கு இருந்து சிவ்ரி சென்று லாரி முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.