கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பிரீத்தா. 22 வயதான இவர்  தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பிரீத்தா அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இவர்களது காதல் விவகாரம் பிரீத்தாவின் வீட்டிற்கு தெரியவரவே, அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத ப்ரீத்தா, பிரபு செல்வத்துடன் சுற்றி திரிந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் ப்ரீத்தா பிரபு செல்வத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவரோ பத்தாயிரம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பணம் வாங்கியுள்ளார். 

ஆனால் நீண்ட நாட்களாகியும், திருமணம் செய்யாமல் தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே இருந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், நீ பணம் கொடுக்கவில்லை என்றால் என்னுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை கேட்டு மனமுடைந்த பிரீத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை தேடி வருகின்றனர்.