கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், அரசியல் கட்சி ஒன்றின் மாணவரணி நிர்வாகியான இளைஞர் மீது காதல் கொண்டுள்ளார். 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வேறு வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால்  திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து, துணிச்சலான முடிவு எடுத்த ஆசிரியை தனது வீட்டில் இருந்த சுமார் 50 சவரண் நகைகளை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள கோவிலில் காதலன் முரளியை திருமணம் செய்த ஆசிரியை சர்மிளா, தஞ்சம் கேட்டு, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளார்.

அங்கு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மனு கொடுத்துள்ளார். பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, நகை என படு அமர்க்களமாக வந்த இளம் ஜோடியால் ஆணையர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.