தெலங்கானாவில் சாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து, மனதை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம் பில்லாபுரம் நாகராஜ் (30). ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக  வேலை பார்த்து வந்தார். 

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண் வீட்டார் கத்தியால் குத்தி ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் 

தெலங்கானாவில் சாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து, மனதை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம் பில்லாபுரம் நாகராஜ் (30). ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

பெற்றோர் எதிர்ப்பு

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு நாகராஜும், சுல்தானாவும் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்து விசாகப்பட்டனத்திற்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஆணவக் கொலை

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அஸ்ரி சுல்தான் பெற்றோர் அமைதியாக இருந்ததால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஐதராபாத்திற்கு வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், நாகராஜ் நேற்று இரவு வேலை முடிந்து ஐதராபாத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே வந்து கொண்டு இருந்த போது 4 பேர் அவரை வழிமறித்து நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 

வாக்குமூலம் 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் உயிரிழந்த செய்தியை அறிந்த சுல்தானா கதறி துடித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சுல்தானாவின் உறவினர்களே இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, எங்கள் எதிர்ப்பையும் மீறி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் நாகராஜனை ஆணவக் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.