காதல் விவகாரத்தில் இளம்பெண்  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஸ்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா(19) இன்ஜினியரிங் மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(23) ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலமாக மாறியது. 2  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் உடனடியாக மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 

இதையறிந்த காதலன் சின்னசாமி திவ்யாவிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அதற்கு காதலி நமது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர்களை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.  எனவே நமது காதலை மறந்துவிடுவோம் என கூறியுள்ளார். அதற்கு சின்னசாமி சமாதானம் செய்து காதலை தொடர்வோம் என தெரிவித்துள்ளார். ஆனால், திவ்யா கட்டாயமாக மறுத்துள்ளார். இதனால் சின்னசாமி காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு தனியாக இருந்த திவ்யாவிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஆத்திரமடைந்த சின்னசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவின் கழுத்தை அறுத்துள்ளார்.  திவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் ஓடிவந்தனர். அதற்குள்ளேயே வெளியே சென்றிருந்த திவ்யாவின் பெற்றோர் வீடு திரும்பினர். மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறி துடித்தனர். அப்போது சின்னசாமி அதே கத்தியால் தனது வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரையும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், வழியிலேயே திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். சின்னசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக போலீசார் வழக்குப்பத்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கொன்று வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.