கோவையில் ஒரே பெண்ணை இருவர்  காதலித்த விவகாரத்தில் தனியார் கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் உக்கடம் அடுத்த கெம்பட்டி பாலனி பகுதியை சேர்ந்தவர் முரளீதரன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியை காதலிப்பதில் சக மாணவரான பாலாஜிக்கும் முரளீதரனுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

 

இதனையடுத்து முரளீதரனை கொலை செய்து விட வேண்டும் பாலாஜி முடிவு செய்தார். இந்நிலையில் கெம்பட்டி காலணியில் உள்ள மைதானம் அருகில் முரளீதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலாஜி எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து முரளீதரன் வயிற்றில் குத்தியுள்ளார்.

 

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முரளீதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.