ஓசூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த எல்லேஷ் என்ற இளைஞரும், அதே கிராமத்தில் சேர்ந்த மாமன் மகளான  ஜோதியும் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களின் காதலை வீட்டில் சொன்ன போது அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல ஜோதிக்கு வேறு ஒருவரைத் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கவே நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரும் காருக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலையில் தகவல் அறிந்து அங்கு திரண்ட உறவினர்களும், ஊர் மக்களும், இந்த காதல் ஜோடி உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதைக் பார்த்து கதறி அழுதனர்.  மேலும், சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்ட ஓசூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனையடுத்து வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.