புதுச்சேரியில் பயங்கரம்.. நாட்டு வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை.. காரணத்தை கேட்ட நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதாநகர்  சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ் (34).  பூமியான்பேட்டையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

lorry driver brutal murder in puducherry

தனது உறவினரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் லாரி ஓட்டுநர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதாநகர்  சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ் (34).  பூமியான்பேட்டையில் உள்ள இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ராஜியும்  கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஒருவழியாக  உறவினர் உடல் அடக்கம் செய்யப்பட்டு ராஜி வீடு திரும்பினார். 

இதையும் படிங்க;- என் பொண்டாட்டி கூட கள்ளத்தொடர்பு வச்சிருக்கான சந்தேகத்தில் கொலை செஞ்சிட்டேன்.. கொத்தனார் கொடுத்த பகீர் தகவல்!

lorry driver brutal murder in puducherry

இந்நிலையில், நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் தங்கள் கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை ராஜி மீது வீசியுள்ளார். இதில், அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலியார் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;-  உடலில் சூடு! குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை.. காமவெறி பிடித்த தாய் சிக்கியது எப்படி?

lorry driver brutal murder in puducherry

இந்த கொலை சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios