சேலத்தில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஏட்டு அரைகுறை ஆடையுடன் வசமாக சிக்கியுள்ளார். இதனையடுத்து அவர் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள லாட்ஜூக்கு இளம்பெண்களை அழைத்து சென்று காவலர் ஒருவர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதை வழக்கமாக கொண்டிருந்ததால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு ஏட்டு சென்றது நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாட்ஜில் அதிரடி நுழைந்து அறையில் சென்று பார்த்த போது ஏட்டு அரைகுறை ஆடையுடன் சிக்கினார். அங்கிருந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பின்னர் ஏட்டுவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இதுபோன்று பெண்களுடன் லாட்ஜூக்கு சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்தே அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.