கோவையில் பிரபல லாட்ஜ் ஒன்றில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டபோது. அப்போது லாட்ஜில் இருந்த அழகியை மீட்டனர். அந்த சமயத்தில் அழகியுடன் குஜாலாக இதை பெருசு கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்ததை கண்டு போலீசார் கைது செய்தனர்.

கோவை ராம்நகரில் உள்ள பிரபல லாட்ஜே ஒன்றில் மெகா விபசாரம் நடப்பதாக கோவை காட்டூர் போலீசுக்கு நள்ளிரவில் தகவல் கிடைத்தது. தகவலை அடித்து லாட்ஜில் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் சுமித்ரா தலைமையிலான போலீசார்  சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கிருந்த 10 அறைகளில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் உறுதியானதும் நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக லாட்ஜூக்குள் நுழைந்த போலீஸ். முதல் அறையை சோதனை செய்தபோது அங்கு 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இருந்தார். அந்த ரூமில் கட்டிலுக்கு அடியில் ஒரு முதியவர் ஒளிந்திருந்தார். அழகியை மீட்ட போலீசார் கட்டிலுக்கு அடியில் இருந்த முதியவரை பிடித்தனர்.  

அங்கிருந்த முதியவர் லாட்ஜ் மானேஜர் மனோகரன் என்பது தெரியவந்தது. மேலும் போலீஸ் நுழைந்ததை தெரிந்துகொண்ட மற்ற மற்ற அறையில் இருந்த அழகிகள் மற்றும் உல்லாசம் அனுபவிக்க வந்தவர்கள் தெறித்து ஓடியது தெரியவந்துள்ளது. போலீசார் விரட்டிச் சென்றதில் ஆனால் இருட்டில் மறைந்து தப்பி விட்டனர். 

மேலும், பிடிபட்ட அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். முதியவர் மனோகரனை போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணையில் இந்தியா முழுவதும் விபசார தொழிலில் கிங் புரோக்கர் சிக்கந்தர் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். லாட்ஜ் ஓனரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.