எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஆண் நண்பருடன் கடலை.. லிவிங் டூ கெதர் காதலியை கதறவிட்ட காதலன்.. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரம் லிவிங் டூ கெதர் காதலி கழுத்து நெரித்து கொலை செய்த காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சிராவணி சில மாதங்கள் கோவாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்து அங்குள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். திடீரென சிராவணியின் நடத்தையில் கோபால கிருஷ்ணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் பல ஆண்களுடன் நெருங்கி பழகி வருவதும், போன் பேசி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை கோபால கிருஷ்ணா கண்டித்துள்ளார்.
ஆனால், இதனை சிராவணி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கோபால கிருஷ்ணா இதுதொடர்பாக கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த கோபால கிருஷ்ணா சிரவாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், தானாகவே காவல் நிலையத்திற்கு சென்று பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.