மதுரை சிறையில் இருந்து எஸ்கேப் ஆன ஆயுள் தண்டனை குற்றவாளி.. 25 நாட்களுக்கு பிறகு சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்

மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய சிறை கைதி 25 நாட்களுக்குப் பிறகு மதுரையில் பதுங்கி இருந்த நிலையில் சிறைத்துறை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

Life sentence prisoner who escaped from Madurai jail arrested KAK

சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி

மதுரை மத்திய சிறையில் கொலை, கொள்ளை, கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறைத்துறை சார்பாக பல்வேறு பணிகள் வழங்கப்படும் அந்த வகையில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஆயுள் கைதி சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தேனி மாவட்டம் அல்லிநகரம் சுக்குவடன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47) ஆயுள் தண்டனை சிறைவாசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி  சிறை வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் மாலை வேளையில் இவர் தப்பி சென்றது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வந்தனர். 

Life sentence prisoner who escaped from Madurai jail arrested KAK

சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்

சிறைத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை, தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வந்த நிலையில். இன்று காலை மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் இருப்பதை தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே குற்றவாளி ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.  சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை சிறைவாசியை 25 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தப்பியோடிய சிறைவாசியை கைது செய்த காவலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சேதுராமன் உட்பட தனிப்படையினரை மதுரை சரக டிஐஜி திரு பழனி மற்றும் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினர். 

இதையும் படியுங்கள்

மழை பெய்யத் துவங்கிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! ஒருவேளை இதுதான் திராவிட மாடலா- ஓபிஎஸ் ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios