இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில்,
கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது காட்சிகள்,
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத் தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர், 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி-க்கு பாராட்டு தெரிவித்தனர்.
அதாவது கடந்தாண்டு கொரோனா தொற்கு காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணை பெரும்பாலும் காணொலிகாட்சி முறையிலேயே நடைபெற்று வந்தது. அப்போது கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணையில் நீதிபதி முன்பு காணொளிக்காட்சி கேமரா ஆனில் இருப்பது கூட தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அது சமூகவலைதளத்தில் பரவியது. அந்த வீடியோ காட்சிகள் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வந்து விசாரணைக்கு எடுத்தது. அந்தக் குறிப்பிட்ட வழக்கறிஞர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்த நபருக்கு ஆயுள்கால தடை விதிக்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அச்செயலில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெயர் சந்தானகிருஷ்ணன் என்பதும் அந்த ஒழுங்கீனமான சம்பவம் நீதிபதி ஜி.கே இளந்திரையன் பெஞ்ச் முன் நடந்தது என்பதும் விசாரணையில் தெரிந்தது. இந்த வழக்கு விசாரணையை டி,என் பிரகாஷ் மற்றும் ஆர் ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில்தான் இந்த வழக்கில் அந்த குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன் 6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது பெஞ்சில் நடந்த இந்த ஒழுங்கீனம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதி பி.என் பிரகாஷ், அந்தச் சம்பவம் மிக அசிங்கமான செயல் என்றும் இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றும், தனது நீதிபதி பதவியையே ராஜினாமா செய்து விடலாமா என தான் நினைத்ததாகவும் அவர் வேதனையைக் கொட்டித்தீர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
