ஷாக்கிங் நியூஸ்.. பட்டப்பகலில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!
கர்நாடகா மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்தவர் ஹிரண்ண கவுடா. தனது இல்லத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர்.
நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்தவர் ஹிரண்ண கவுடா. தனது இல்லத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. இதனை கண்டு அப்பகுதியில் அலறியடித்து ஓடினர்.
இதையும் படிங்க;- புருஷன் வெளியே போன சைடு கேப்பில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த பயங்கரம்.!
உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹிரண்ணா கவுடாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் எதற்காக வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி.. பீர் கொடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்..!
ஹிரண்ணா கவுடா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கலபுர்கி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாநகரில் உள்ள எஸ்விபி வட்டம் அருகே மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.