துப்பாக்கி முனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சாலையில் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிந்தார். அப்போது, அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள், ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், ஒதுக்குபுறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கதறியபடி ராஞ்சி காங்கே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த, கார், பைக், நாட்டு துப்பாக்கி உள்ளிடவற்றை கைப்பற்றி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.