தமிழகத்தில்  லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அவர்கள் கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு,  இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது,  ஆப்கனிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதவாத அமைப்புகளை காஷ்மீர் மற்றும் தலைநகர் டெல்லியில்  ஏவுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி இருந்தது,  இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் போது கூட்டத்தோடு கூட்டமாக  ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல்  நடத்த லஷகர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு சதி திட்டமிட்டுள்ளதாக மத்திய உளப்பிரிவு எச்சரித்துள்ளது. 

அந்த தீவிரவாதிகள் அண்டைநாடான இலங்கையின் வழியாக கடல்மார்கமாக தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் குறிப்பாக கோவை, மற்றும் வேளாங்கன்னி போன்ற இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாவும் உளவுத்துறை தகவலில் தெரிவிக்கின்றன. குறிப்பாக கோவையில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி விழா ஊர்வளத்தில் போது அதில் ஊடுருவி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிடுள்ளதாக உளவுத்துறையின் எச்சரித்துள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 

முக்கிய இரயில் நிலையங்கள் ,மற்றும் பேருந்து நிலையங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதிப்பூங்காவான தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் என்ற தகவல் தமிழக காவல் துறைக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக கருதப்படுகிறது, எனவே தமிழக காவல் துறை டிஜிபி திருபாதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் சந்தேகப்படும் நபர்களை  பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.