திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நேற்றிரவு வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் வழக்கம் போல 6 செக்யூரிட்டி பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். காலையில் வழக்கம் போல மீண்டும் கடையை திறந்து பார்த்த போது,ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஷோ கேசில் இருந்த நகைகள் ஒரு கிராம் கூட விடாமல் துடைத்து வாரிச் சென்றுள்ளது அந்த கும்பல்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடி வீடியோ காட்சிகளை அலசி ஆராய்ந்து  போட்டோக்களை நேற்று வெளியிட்டிருந்த நிலையில், தற்போது திருடர்கள் கடைக்குள் புகுந்து நகைகளை அள்ளும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். போலீசார் சந்தேகப்பட்டது போலவே, கடையின் கீழ்த்தளத்தில் போட்ட பெரிய ஓட்டை வழியாகத்தான் திருடர்கள் உள்ளே நுழையும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.

கீழ்தளத்தில் உள்ள நகைகள்தான் முதலில் கொள்ளையடிக்கப்படுகிறது. அங்கு அடுக்க வைக்கப்பட்டிருந்த நகை பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைக்கிறார்க. அதிலிருந்து நகைகளை தனியாக எடுத்து கொண்டு அட்டை பெட்டியை அங்கேயே போட்டுவிடுகிறார்கள்.கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மொத்த நகையையும் அள்ளுகிறார்கள். இன்ச் இன்ச்சாக அந்த கண்ணாடியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, நகைகளை எடுக்கிறார்கள். 

கையில் ஆயுதங்கள் எதுவுமே இவர்களிடம் இல்லை, வெறும் ஸ்குரு டிரைவரை வைத்து கண்ணாடி அலமாரியை திறந்து நகைகளை எடுத்து தாங்கள் வைத்திருக்கும் பைக்குள் ஒருவர் திணிக்கிறார். இன்னொருவரும் அதற்கு உதவுகிறார். இந்த கருப்பு பையில் ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது. நகைகள் கொள்ளையடித்துவிட்டு, பையில் கட்டப்பட்டுள்ள கயிறை இழுத்து சென்றுள்ளனர்.

"

கடைக்குள் அதிகாலை சுமார் 3.10க்கு உள்ளே நுழையும் அவர்கள், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த நகைகளை ஷோகேஸில் உள்ள நகைகளை எடுத்துள்ளனர். மிகவும் சாவகாசமான கொள்ளை சம்பவத்தை நடத்திய அவர்கள், கொள்ளை அடிக்கும் போது  சரக்கு அடித்துள்ளது தெரிகிறது. அங்கே மதுபாட்டில்கள் கிடந்ததாம். ஆனாலும் ஒரு இடத்தில் கூட கைரேகைகள் பதியவே இல்லை என்பதால் போலீசாருக்கு இந்த கொள்ளை கும்பலை நெருங்க சவாலாக உள்ளது. ஆனாலும் நம்ம ஊரு போலீசுக்கு இது ச்சப்ப மேட்டரு என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர் .