ஜூவல்லரியில் திருடிய இருவரும் முருகன் மற்றும் அவரது அக்கா மகன் சுரேஷ்! என்கிறது போலீஸ். இந்த முருகனை ஜம்போ திருடன்! என்று அழைக்கிறது போலீஸ். காரணம், அந்தளவுக்கு இந்த முருகன் பற்றி சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 
அவற்றின் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ....

* லலிதா ஜூவல்லரி கொள்ளையின் சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்களை பார்த்ததுமே ‘இது தமிழக கொள்ளையர்தான்’ எனும் முடிவுக்கு வந்துவிட்டதாம் போலீஸ். காரணம், வடநாட்டு கொள்ளையர்கள் மங்கி குல்லா போன்றவற்றைத்தான் பயன்படுத்துவர். இப்படி சின்னப்புள்ளைத்தனமாக கார்ட்டூன் மாஸ்க்கை பயன்படுத்த மாட்டார்கள்! என்பதே.

*    அதனால் ‘லலிதா ஜூவல்லரி கொள்ளையில் வடநாட்டு கொள்ளையர்கள்’ என்று செய்தியை பரப்பி, திசை திருப்பிவிட்டு மளமளவென உள்ளூர் திருடர்களை குறி வைத்ததில் இந்த ஜம்போ முருகனின் கைங்கர்யம் தெரிய வந்திருக்கிறது. 

*     தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரா என்று தென் இந்தியாவையே அதிரவைத்த திருடனாம் முருகன். தேசிய அளவில் “மோஸ்ட் வான்டட் அக்யூஸ்ட்” எனும் பெயரெடுத்தவர். ஆனால் சொந்த ஊர் தமிழ்நாட்டின் திருவாரூர் தான். 

*    ஒருங்கிணைந்த ஆந்திராவை உலுக்கி எடுத்து திருடியவராம். இது வரையில் ஒரேயொரு முறை கைதாகி, வெளியே வந்துவிட்டு அதன் பின் இன்று வரை போலீஸுக்கு தண்ணீர் காட்டுபவர். 

*    சின்னதாய் திருட்டை துவங்கி, பின் பெரிதாய் திருடியிருக்கிறார். கையில் நன்றாக காசு புழங்கியதும், சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். ‘பாலமுருகன் சினிமா கம்பெனி’ எனும் நிறுவனத்தை துவக்கி, தெலுங்கு படம் ஒன்றை எடுத்திருக்கிறார். 

*    இந்த படத்தில் நடித்த தன் அக்காள் மகன் சுரேஷைத்தான் லலிதா ஜூவல்லரி திருட்டில் பயன்படுத்தியிருக்கிறார். 

*    லலிதா ஜூவல்லரியில் லம்பாக திருடுமளவுக்கு முருகனுக்கு என்ன பண கஷ்டம்? என்றால்....எல்லாம் அந்த நாசமாய் போன எய்ட்ஸ் நோயை சரி பண்ண காஸ்ட்லி ட்ரீட்மெண்ட் செய்ய வேண்டும், அதற்குத்தான் இப்படியொரு ஜம்போ திருட்டை செய்திருக்கிறார்! என்கிறார்கள் முருகனின் உறவினர்கள். 

*    எய்ட்ஸ் எப்படி வந்தது?...சினிமா கம்பெனி துவக்கிய பின் அதில் நடிக்க வரும் நடிகைகள், துணை நடிகைகள், பல பணிகளை செய்யும் பெண்கள் என்று பலருடன் ஓவரோ ஓவர் உல்லாசமாக இருந்ததன் விளைவுதான் எய்ட்ஸ் நோயை உருவாக்கியிருக்கிறது இவருக்கு. 

*    பொண்ணுங்களுக்கு செலவு பண்ணியே தான் உயிர பணயம் வைத்து திருடி சம்பாதிக்கும் பணத்தை இழந்திருக்கிறார் முருகன். இதில் எய்ட்ஸும் வந்துவிட்டதாலேயே இந்த பெரிய திருட்டாம். ஆனால் இப்படி தன் குட்டு உடனேயே வெளிப்படும் என்று நினைக்கலையாம். 

*    கர்நாடகாவில் ஐ.டி. நிறுவனங்கள் இருக்கும் பகுதியிலும் அதிகம் திருடியிருக்கிறார் முருகன். டெல்லியில் தாஹி அலி எனும் தாதாவுடன் கூட்டணி போட்டும் திருடியிருக்கிறான். பெங்களூரு சிட்டி போலீஸிடம் மட்டும் இவர் மீது நூறு வழக்குகள் உள்ளனவாம். 

ஆக ஜம்போ முருகன் பற்றி இப்படி தகவல்கள் போய்க் கொண்டிருக்கையில், “போலீஸ் வேண்டுமென்றேதான் ஜம்போ முருகனை தப்பிக்க விடுகின்றனர். காரணம், தான் அடிக்கும் கொள்ளையின் மூலம் கிடைக்கும் பணத்தில் கணிசமான சதவீதத்தை போலீஸ் மாமூலுக்கே கொடுப்பார். எந்த மாநிலத்தில் திருட்டுப் பணியிலிருந்தாலும், தீபாவளி மற்றும் பொங்கல் சமயத்தில் சொந்த ஊருக்கு வருவது முருகனின் வாடிக்கை. 

அவர் வந்துவிட்டது தெரிந்தாலே அங்கே ரவுண்டடித்து, கணிசமாக வாங்கிட்டு போகும் போலீஸா இவரை பிடிக்கப்போவுது?” என்கின்றனர். 
ஓ மை காட்!