சென்னையை அடுத்த துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கிற்கு கடந்த 21 ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் பவர் அவுஸ் பகுதியில் இருந்து குப்பைகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் 2 கால்கள் இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. 

அந்த கைஇ கால்களில் டிராகன் படமும் வலது கை தோள் பட்டையில் சிவன், பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. காலில் பெண்கள் அணியும் மெட்டி போட்டதற்கான அடையாளம் இருந்தது.

இதைத் தொடந்து கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தற்போது துப்பு துலங்கியுள்ளது. 

இந்நிலையில் அது தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பது தெரியவந்துள்ளது.. ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றிஅ வருகிறார். அவருடைய மனைவிதான் சங்கீதா. அவர்கள் ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கும் சங்கீதாவுக்கும் அடிக்க தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ராமகிருஷ்ணன் தனது மனைவியை அடித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து கை, கால்களை துண்டு துண்மாக வெட்டி குப்பைத் தொட்டியில் கொண்டுபோய் போட்டுள்ளார்.

தொடர்ந்து ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சங்கீதாவின் மற்ற உடல் பாகங்கள்  எங்கே என்றும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.