கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதி பகுதியை சேர்ந்தவர் ராஜா, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி பகுதியில் ராணி, முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் ராணி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேல ஆசாரப்பள்ளியை சேர்ந்த தேவராஜ் (60) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ராணியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

விசாரணையில், தேவராஜிக்கும், ராணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ராஜா பெங்களூருல் தங்கி கூலி வேலை செய்து வந்ததார். இதனால், தேவராஜ் அடிக்கடி ராணி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இதற்கிடையில் தேவராஜ், அதே பகுதியில் 3 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு ராணி கேட்டுள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தேவராஜ் கண்டித்தும் ராணி, அந்த தொடர்பை டவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு செல்போனில் கூறியுள்ளார்.

இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்றார். அப்போது வேறு ஒருவருடன் உள்ள கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது தெரிந்தது.