வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் சங்கரன் கோவிலில் நடந்த இந்த கொடூர கொலையில் கொலையாளி யார்? போலீசார் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த 31 வயது பெண் முத்துமாரி கத்தியால் குத்தப்பட்டு உடலில் பல்வேறு பாகங்களில் படுமோசமாக கிழிக்கப்பட்டு பரிதாபமாக பலியாகி கிடந்தார். அந்த பெண்ணிடம் இருந்த நகைகளும் எதுவும் பதிவாகவில்லை, வீட்டில் இருந்த பணம் முக்கிய பொருள்கள் எதுவுமே காணாமல் போகவில்லை எதற்காக  இந்த கொலை நடந்தது? இதை செய்தது யார்? இதன் பின்னணி என்ன? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சேர்ந்த கோமதிநாயகம், முத்துமாரிக்கும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வியாழக்கிழமை காலை கோமதிநாயகம் வேலைக்கு சென்ற பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு முத்துமாரி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.  அன்று மாலை பள்ளிக் கூடம் முடிந்து மகன்களும், தனது மகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது தனது தாய் முத்துமாரி உடலில் பல்வேறு பாகங்களில் கத்தியால் குத்தப்பட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அலறி அடித்து ஓடி வந்த குழந்தைகள் அக்கம்பக்கத்தினரிடம் அழுது கொண்டு சொன்னதால், உடனடியாக அவர்கள் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளே சென்று சோதனை விட்டு பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து முத்துமாரியை கொலை செய்யும் அளவிற்கு அவர் கணவருக்கோ அல்லது  குடும்பத்திற்கோ யாராவது எதிரிகள் உள்ளார்களா? என போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வந்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட  விசாரணையில் பலதிடுக்கி தகவல்கள் வெளியானது. அதில் வியாழக்கிழமை மதியம் 3 மணி அளவில் கணவர் கோமதிநாயகம் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து சரியாக 4 :30 மணிக்கு குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியது . அப்போதான் அப்போதான் முத்துமாரி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். பிற்பகல் 3 மணியில் இருந்து 4 மணிக்குள் தான் முத்துமாரி கொலை செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துமாரி கழுத்து அறுக்கப்பட்டு வயிறு, மார்பு வலது கை போன்ற இடங்களில் சரமாரியாக கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. 

அவரது கழுத்தில் இருந்த செயின் அறுக்கப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள பொருட்கள் சாமான்கள் எதுவும் பதிவாகவில்லை, அதேபோல வீட்டில் உள்ள பொருட்களும் களைந்ததைப்போல தெரியவில்லை ஆக முத்துமாரிக்கு, அந்த குடும்பத்திற்கும் நன்கு தெரிந்த ஒருவர் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இதுபோல, பொருட்கள் எதுவும் திருடு போவதால் இது பணம் நகைக்காக நடந்த கொலை போல தெரியவில்லை, மேலும் முத்துமாரியின் கணவர் கோமதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.