விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, பெண்களின் குளியல் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை அணுஅணுவாக ரசித்து பார்த்ததாக கைது செய்யப்பட்ட விடுதி உரிமையாளர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் 30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுடன் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 1-வது தெருவில் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில், திருச்சியை சேர்ந்த சஞ்சீவ் (எ) சம்பத் (45) என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இந்த விடுதியில் ஐடி நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி உள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 3-ம் தேதி பிற்பகல் விடுதியில் தங்கி இருந்த புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் குளித்த போது, வாட்டர் ஹீட்டரில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்து விடுதியை சேர்ந்த பெண்களிடம் தெரிவித்தார். அப்போது, ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தனது செல்போனில் உள்ள ‘ஹிடன் கேமரா டிவைஸ் ஆப்’ உதவியுடன் விடுதியின் இரண்டு தளத்திலும் 16 இடங்களில் ரகசியமாக கேமராக்களை கண்டுபிடித்தார். 

பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ரகசிய கேமராவுடன் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் சஞ்சீவின் அஸ்தினாபுரம் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான செல்போன்கள், லேப்டாப், கணினிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், விடுதியில் தங்கியுள்ள இளம்பெண்களின் குளியல் காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பறிமுதல் செய்தனர். 

பிறகு இந்த மோசடியில் ஈடுபட்ட விடுதி உரிமையாளர் சஞ்சீவை தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அஸ்தினாபுரத்தில் பதுங்கிருந்த இருந்த சஞ்சீவை பிடிக்க போலீசார் சென்றனர். அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அப்போது  நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. மேற்கொண்டு அவரால் ஓட முடியாததால் சுற்றிவைத்து கைது செய்தனர். 

பின்னர், சஞ்சீவ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:  திருச்சியைச் சேர்ந்த நான் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். பின்னர் ஓட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்த சஞ்சீவ் பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் போது நண்பர்களுடன் சேர்ந்து பெங்களூரு, மும்பை என பல இடங்களில் உல்லாசத்திற்காகவே லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்துள்ளார். இதனாலேயே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சரி செய்யவே அவர் நிலங்களை வாங்கி விற்பனை செய்ததில் பல லட்சம் மோசடி செய்து சிக்கி கொண்டார். 

அழகான மனைவி இருந்தாலும், சஞ்சீவ் இரவு நேரங்களில் தனது செல்போனில் ஆபாச இணையதளங்களில் குளியல் மற்றும் லெஸ்பியன் காட்சிகளை தான் விரும்பி பார்த்து வந்துள்ளார். இதை அவரது மனைவி பலமுறை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையான சஞ்சீவ், பெண்கள் விடுதி நடத்தினால் எல்லாமே நேரடியாக பார்க்க முடியும் என்று அவரது நண்பர்கள் சஞ்சீவுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். அதன்படிதான் ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து எந்த அனுமதியும் பெறாமல் பெண்கள் விடுதி தொடங்கியுள்ளார்.

விடுதியில் தங்கி இருந்த ஐடி நிறுவன பெண்கள், தனியார் நிறுவன பெண்கள் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்று விடுவார்கள். பிறகு மாலை 5 மணிக்கு மேல் தான் விடுதிக்கு திரும்புவார்கள். இதனால் விடுதியில் ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்க்கவே சஞ்சீவ், விடுதியில் தனக்கு என உள்ள தனி அறைக்கு தினமும் காலை 10 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு சென்று விடுவார். பிறகு இரவு 8 மணிக்கு வந்து இரவு 11 மணி வரைக்கும் அவருக்கான அறையில் இருந்து அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டு வீட்டிற்கு செல்வார். 

இப்படி கடந்த 2 மாதங்களாக இளம்பெண்களின் குளியல் காட்சிகளை தனி ஒருவனாக அணுஅணுவாக ரசித்து வந்துள்ளார். விடுதியில் தனியாக இருக்கும் போது சக தோழிகளுடன் லெஸ்பியனில் ஈடுபட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் தானாக முன் வந்து பேச்சு கொடுப்பார். அப்போது, அவர்கள் பேச்சு கொடுத்தால் அவர்களிடம் தனது செல்போனில் அவர் குளித்த காட்சிகள், லெஸ்பியன் காட்சிகளை காட்டி ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி உள்ளார். 

இதுவரை அப்படி 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சஞ்சீவ் தனது வலையில் சிக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படி பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் பயத்தில் விடுதியை காலி செய்து விட்டு சென்று விட்டனர். சஞ்சீவுக்கு செக்ஸில் அதிக நாட்டம் இல்லையென்றாலும், யாரும் அனுபவிக்காத இளம்பெண்கள் மீதுதான் அதிக ஆசை இருந்துள்ளது. இதனால்தான் அவர், பல லட்சம் செலவு செய்து பெண்கள் விடுதி தொடங்கி தனது காம பசியை தீர்த்துள்ளார். அதில் இருந்து விடுபட முடியாத நிலையில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் செல்போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குளியல் காட்சிகளை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார் இது தொடர்பாக அவரது சண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.