யாருமே பார்க்க வரலையே என ஏங்கும் அபிராமி! என்ன சொல்கிறார் கணவர் விஜய்?
அபிராமியை நான் சந்திக்கவே இல்லை. குழந்தைகளின் நினைவாகவே வாழ்ந்து வருகிறேன் என அபிராமியின் கணவர் விஜய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சென்னை கிண்டியை அடுத்து குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு அதேபகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.
தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய் கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரும் கணவருக்கு கட்டுப்படாத அபிராமி இரு குழந்தைகளையும் வீட்டில் தவிக்க விட்டு காதலன் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று இருந்து கொண்டதாகவும் அவரை கெஞ்சி கூத்தாடி கணவர் விஜய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். கணவரின் டார்ச்சரால் தனது கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன் தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்ட அபிராமி டீ யில் விஷத்தைக் கலந்து கொடு தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பித்து சென்றார்.
இதனையடுத்து, அபிராமியின் காதலனான சுந்தரத்தை கைது செய்து விசாரணையில் கொடியுத்த தகவலின் அடிப்படையில், திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த அபிராமியை, பேருந்து நிலையத்தில் பிடிபட்டார். கைது செய்த போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமின் மறுக்கப்பட்டது. சிறையில் இருக்கும் தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை என மனஉளைச்சலில் அபிராமி இருப்பதாக சிறை துறையினர் கூறினர்.
இதுகுறித்து கணவர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவர் ஜெயிலுக்கு போனது முதல் நான் அபிராமியை ஜெயிலுக்கு சென்று சந்திக்கவே இல்லை. குழந்தைகள் இறந்த சமயத்தில் மட்டும் அபிராமியின் பெற்றோருடன் தங்கியிருந்தேன்.
நானும் அதன்பிறகு தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் இதுவரை அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் அபிராமியின் கணவர் விஜய்.