சென்னை கோயம்பேட்டில் மனைவியுடன் சண்டையில் ஈடுபட்ட கணவனை  பேருந்தில் தள்ளி  பிச்சைக்காரன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல இன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது,  கோயம்பேட்டில் உள்ள உணவகங்களில் வேலை செய்து அங்கேயே பல வருடங்களாக  மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் கேரள மாநிலத்தை சேர்ந்த டேவிட் . இவரது மனைவியின் பெயர் செல்வி, இருவரும் அங்குள்ள உணவகங்களில் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி செல்வியுடன் தகராறில் ஈடுபடுவது டேவிட்டின் வழக்கம் . இந்நிலையில் இன்று காலை வேலைக்கு செல்லாமல் டாஸ்மாக் சென்று குடித்துவிட்டு வந்தார் டேவிட், இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பேருந்து நிலையத்திலேயே செல்வியை சரமாரியாக அடித்து உதைத்தார் டேவிட் .

 

இந் நிலையில் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த  திருப்பத்தூர் மாவட்டம் குலுச்சை கிராமத்தைச்சேர்ந்த சிங்காரவேல் என்பவர், கணவன் மனைவிக்கிடையே நடந்த தகராறில் தலையிட்டு தடுத்ததுடன். மனைவியை அடிக்க பாய்ந்த டேவிட்டை  பிடித்து  கீழே தள்ளினார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வேகமாக வந்த பேருந்தில் சக்கரத்தில் சிக்கிய டேவிட்  உடல் நசுங்கி ரத்த வெல்லத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்ததுவிட்டது. இதை கண்ட பொதுமக்கள்  சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . உடனே அங்கு வந்த பேலீசார் டேவிட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன். கொலைக்கு காரணமாக டேவிட்டை கைது செய்தனர் . கொலைக்கான காரணம் குறித்தும் சிங்கார வேல்  இதில் தலையிட காரணம் என்ன என்பது குறித்தும் செல்வியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.