குடி போதைக்கு அடிமையான சிறுமியை ஓராண்டாக சீரழித்த காமக்கொடூரன்கள்... போக்சோவில் தூக்கிய போலீஸ்...!
கொடைக்கானலில் 15 வயது சிறுமியை ஒருவருடமாக கற்பழித்து வந்த மூவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனுர் பகுதியை சார்ந்தவர் தேவதாஸ் பார்வைக்குறைபாடுள்ளவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தேவதாஸ் தன்னுடைய மகளுக்கும் சிறு வயது முதலே மது குடிக்க பழக்கப்படுத்தியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவருடைய மனைவி தேவதாஸை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் மகளுடன் தனியாக வசித்து வந்த தேவதாசுக்கு மது வாங்கி கொடுக்கும் தாய் மாமன் கண்ணன் என்பவர், மது அருந்திவிட்டு மயங்கி கிடக்கும் சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களான குமார், மணிகண்டன் ஆகியோரிடம் இதைக் கூறி, மூவரும் ஒன்றாக இணைந்து பல மாதங்களாக அந்த சிறுமியை சீரழித்துள்ளனர்.
சிறுமியின் வீட்டிற்கு தொடர்ந்து இவர்கள் வந்து செல்வத்தையும் அதன் பின் சிறுமி போதையில் உளறுவதையும் கண்ட பொதுமக்கள் 1098 சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சைல் டுலைன் அமைப்பினருக்கு கொடுத்த புகாரை அடுத்து சிறுமியை மீட்ட கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமியின் மது பழக்கத்தினை பயன்படுத்தி அவரை தொடர்ந்து கற்பழித்து வந்த செண்பகணூரைச் சேர்ந்த கண்ணன், குமார் மற்றும் குறிஞ்சி நகர் பகுதியை சார்ந்த மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா எந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.