நள்ளிரவில்  கதவைத் தட்டி உள்ளே நுழைந்து பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொடர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகிறது.

நள்ளிரவில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்து பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொடர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகிறது. இது மாநில பெண்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறி வருவதாக அம்மாநில மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் பெண்ணை நள்ளிரவில் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் பர்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் இருந்து விஜய நகரத்திற்கு வேலைக்கு வந்த பெண்ணுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. அந்தப்பெண் உள்ளூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் திங்கட்கிழமை அவரின் வீட்டுக் கதவைத் தட்டிய நபர் அவர் திறந்ததும் வலுக்கட்டாயமாக உள்ளே புகுந்தது இந்த அட்டூழியத்தை ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் இதுவரை இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, விஜயநகரம் உடா காலனியில் கட்டம்-3ல் தனது 2 குழந்தைகளுடன் வசிக்கும் ஒரு பெண், ரைது பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அறிமுகமான வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். நள்ளிரவில் வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் அதன் கதவை பலமாக தட்டினார். அப்போது அந்தப் பெண் வீட்டின் கதவை திறந்தார், வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை வீட்டுக்குள் தள்ளி அந்த வாலிபன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்த நபர் அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது. தனது நண்பர்கள் முன்னிலையில் அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்நிலையில் ஆவேசமடைந்த அந்த பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து ஒன் டவுன் போலீசில் புகார் செய்தார். உடனே இரவு ஒன் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளில் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை திஷா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் மகாராஜா மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் பெண்ணின் புகாரில் சில சந்தேகங்கள் இருப்பதாக மாவட்ட எஸ்பி எம். தீபிகா தெரிவித்துள்ளார்.

பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நேரத்தில் அந்தப் பெண்ணுடன் அவரின் தோழியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணின் புகாரை விசாரித்த போது குழந்தைகள் சொல்வதற்கும் அந்தப் பெண் சொல்வதற்கும் சிறிது வித்தியாசம் இருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, தடயவியல் அறிக்கை வந்த பிறகே குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மை தெரிய வரும் என போலீஸ் எஸ்.பி தீபிகா கூறியுள்ளார்.