சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய நிலையில் அந்த பெண்ணின் மற்ற பாகங்களையும் கண்டுபிடித்துள்ளது.

பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் மீட்கப்பட்ட நிலையில், 3 கோணத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண் குறித்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததில் வெட்டப்பட்ட பெண் தூதுக்குடியைச் சேர்ந்த சந்தியா என தெரிய வந்தது. சந்தியா கொலை தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய  பாலகிருஷ்ணனிடம் விசாரணை  நடத்தியதில் காதலித்து கல்யாணம் செய்த மனைவி தனது மோசமான வறுமை நிலையை காரணம் காட்டி வேறொருவருடன் இப்படி கள்ளத் தொடர்பில் இருக்கிறாரே என்ற கோபத்தில்  ஜாபர்கான்பேட்டை வீட்டில் வைத்து வைத்து சந்தியாவை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கணவர் கொடுத்த  தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி தியேட்டர் அருகே உள்ள கூவம் கால்வாய் அருகில் பெண்ணின் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை தேடி எடுத்தனர். மேலும், சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.