பசுவநதனை அருகே கம்யூட்டர் வகுப்புக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தூத்துக்குடி மாவட்டம்,  பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகள் மகராசி (17), கல்லூரி மாணவியான இவர் கடந்த சனிக்கிழமை கம்ப்யூட்டர் சென்டருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

அதன் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில தேடிப்பார்த்தும் தகவல் இல்லையாம். இது தொடர்பாக அவரது தந்தை பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், துரையூரைச் சேர்ந்த சின்னசாமி (27) என்பவர் மகராசியை காதலித்து வந்ததாகவும், அவருடன் மாணவி மகராசி மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தியதாக சின்னசாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.