கேரளாவில் சொத்துக்காக தன் காதல் மனைவியையே கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வண்ணம்  பகுதியைச்  சேர்ந்தவர் வைசக் பைஜி, இவருக்கும்  கிரித்தி மோகன்  என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த ஒராண்டாக   காதலித்து வந்த நிலையில் .  இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 

கீர்த்தி மோகனுக்கு ஏற்கனவே திருமணமாகி  4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது .  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் கணவரைப்  பிரித்து இவர் இரண்டாவதாக வைசக் பைஜியை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான சில நாட்களிலேயே கிரித்தி  மோகனுக்கு இருக்கும்  சொத்து குறித்து கேட்டு வைசக் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனியாக இருந்தால் தனது உயிருக்கு  ஆபத்து உள்ளது  என தெரிந்து கொண்ட கீர்த்தி மோகன், கணவர் வைசக்குடன் தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.  ஆனால் அங்கு வந்தும்  இருவருக்கும் தொடர்ந்து தகராறு இருந்து வந்துள்ளது.  சம்பவம் நடந்த அன்று இரவு சொத்து குறித்து இருவருக்கும்  இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது . பின்னர்  நீண்ட நேரமாகியும் அவர்களின் படுக்கையறைக்  கதவு திறக்காததால்  சந்தேகமடைந்த கிரித்தி மோகனின் தாய் பிந்து கதவைத் திறந்து படுக்கை அறைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கிருத்தி மோகன் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு பயங்கர அதிர்ச்சி அடைந்த அவர்,  மகளை மீ ட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

அங்கு கிருத்தி மோகனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவும்  தெரிவித்தனர்.  இந்நிலையில் மகளை பறிகொடுத்த நிலையில் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த தாய் பிந்து,  படுக்கை அறையில் வந்து பார்த்தபோது அங்கே எதுவும் தெரியாததுபோல்  கணவன் வைசாக் நல்ல பிள்ளைபோல படுத்து இருந்தான்.  உடனே அந்த அறை கதவை பூட்டிய பிந்து  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வைசக்கை  பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.  பிறகு போலீஸ் விசாரணையில்,  மனைவி கிரித்தி மோகனின்  கழுத்தை நெரித்து கொலை செய்ததை வைசாக் ஒப்புக்கொண்டார்.  சொத்துக்காக கணவனே மனைவியை கழுத்தை நெறித்து  கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.