Asianet News TamilAsianet News Tamil

கேரளா தங்க கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது

கேரளா தங்க கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

kerala gold smuggling cases accused swapna arrested in bangalore
Author
Bangalore, First Published Jul 11, 2020, 9:21 PM IST

கேரளா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது தங்க கடத்தல் விவகாரம். கடந்த 4ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திவந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத் துறை வட்டராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. ஸ்வப்னா கேரள தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்ப துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிபவர். கேரள அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா தங்க கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தங்க கடத்தல் விவகாரத்தில், தலைமை செயலக அதிகாரியே சிக்கியிருக்கும் நிலையில், அதன் விளைவாக முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்வப்னா  தலைமறைவானார். அவரை போலீஸார் வலைவீசி தேடிய நிலையில், அவர் தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் தமிழ்நாட்டிற்கு காரில் வரும் சிசிடிவி காட்சி வெளியானது. அதனால் தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னாவை தேடும் பணி தமிழகத்தில் தீவிரமாக நடந்துவந்தது. இந்நிலையில், ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவை என்.ஐ.ஏ அதிகாரிதிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios